
இப்பாடலில் ஒரே சொல் ஏழு பொருள்களில் வருகிறது.
பெரியபுராணத்தில் சுந்தரர் பரவை நாச்சியார் மீது கொண்ட காதலை விவரிக்கும் பாடல் இது.
இதன் பொருள் அவள் பெயரோ பரவை. அவர் தேவரின் அரசவை அழகிகளும் வணங்கத் தக்க பெண்மை நலம் கொண்டவள். முத்து போன்ற அவள் பற்கள் முல்லை அரும்பை நிகர்த்தன. திருமகள் போன்ற அழகைக் கொண்ட அவள் மீது நான் கொண்ட காதல் ஏழு கடல் அளவிற்கு ஆழமானது.
ஏழுகடல் அளவிற்கு பரவையார் மீது கொண்ட காதலை விளக்கும் பாடலிலும் ஏழு முறை பரவை என்ற பெயர் வருவது நோக்கத்தக்கது.
பேர்பரவை = இவள் பெயர்பரவை;பெரும் பரவை = பெரு+ உம்பர்
- அவை – பெரிய தேவர் அவை (தேவர் கூட்டம்); ஆர் பரவை = பரவு + ஐ – வாழ்த்தும் தெய்வம்; அரும்பரவை = அரும்பர் +அவை; முல்லை அரும்புகள் போன்ற பற்களை உடையவள்; சீர்பரவை = சிறந்த பரவை எனும் கூந்தலை உடைய இலக்குமி; ஏர் பரவை = அழகிய பரப்பு; எழு பரவை = ஏழு கடல்கள்)
பாடல் கீழே:
“பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள்
திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட
என்னாசை யெழுபரவை”
