சிட்டுக்குருவி/அழகியசிங்கர்

சிட்டுக்குருவியே
சிட்டுக்குருவியே
சென்னையை விட்டு
எங்கே நீவிர்
சென்றுள்ளீர்

தானாகவே
வந்து விடுங்கள்

வைத்திருக்கும்
தானியத்தைக்
கொத்தி
கீச் கீச்சென்று
கத்துக்கள்