
கிணற்றில்
தண்ணீர் கீழே இறங்கி
அதல பாதாளத்திற்குப்
போய்விட்டது
என்ன செய்வது?
எல்லோரும் காசு கொடுத்து
லாரியில் தண்ணீர்
வாங்கினோம்
மீண்டும் மீண்டும்
தண்ணீர் வாங்கினோம்
மழை பெய்தது
தண்ணீர் வாங்கினோம்
மழை பெய்யவில்லை
தண்ணீர் வாங்கினோம்
தண்ணீரை வைத்து
சண்டைப் போட்டோம்
நட்பை வளர்த்தோம்
தண்ணீர் மௌன சாட்சியாய் இருந்தது
எங்களை கிண்டல் செய்தது
நாங்கள் வெட்கப் படவில்லை
