
“இரண்டுமாத வீட்டுவாடகை கொடுக்க
வக்கில்லே.ஹிண்டுபேப்பர் ஒருகேடா”
ஐயரே..” என்று வீட்டின் உரிமையாளர்
திட்டியபோது கரிச்சான்குஞ்சு ஆடித்தான்
போனார்.’வலிக்கும்போது அழனும்,மகிழ்
ச்சிவரும்போது சிரிக்கனும்,கோபம் வரும்
போது திட்டித்தீர்க்கனும்-இது வாழும் நெ
றி என்பார்.அவரின் ஓயாத அலைச்சலுக்
கு இதுவும் காரணம். கரிச்சான் குஞ்சு
வின் பேச்சை ரசிப்பதே சுவாரசியம்.தனி
மனசு வேண்டும்.பேசிக்கொண்டே துள்
ளுவார்.குதிப்பார்,கைகளை காற்றை வெ
ட்டுவதுபோல் வீசுவார்.தன்னைச்சுற்றி
லும் ஆனந்தமயப் பிரதேசத்தை உருவாக்
கிவிடுவார்.வக்காள ஓளி” என்பது அவரு
க்கு ஒரு சொல்.அவ்வளவே.
அறங்கள் நம்மிக்கைகளின் சாரம் என்பா
ர். இது மாறாதது.முக்கியமானது.இதுக்குமேல் என்ன இருக்கு
எல்லாமே கல்பிதம்தான்.இந்தி,ஆங்கில
ம்,தமிழ்,சமஸ்கிருதம் கன்னடம் என நன்
றாக அறிந்தவர்.வேத அத்யானம் ராமேச்
வரம் வேதபாடசாலையில். சமஸ்கிருதம்,
கன்னடத்தில் சொற்பொழிவாற்றும் வல்
லமையாளர்.காஞ்சி மடத்தில் வேதவிஷ
யங்களில் ஏதாவது சந்தேகம் என்றால்
“கூப்பிடு நாராயணசாமியை” என்பாராம்
பரமாச்சாரியார்.அவரிடமே வாதிட்டிருக்கி
றார்.
எந்தவேலையிலும் நிரந்தரமாக இருக்க
முடியவில்லை.அரசாங்கம் அதன் சட்டதிட்
டங்கள் எவையுமே தனக்குச் சம்பந்தமில்
லாதவை என்ற மனோபாவம். ஞானம்
அவருடைய ஆசை;அவருடைய அங்கம்.
இடைவிடாத ஓட்டமும் அலைச்சலும்
கடைசிவரை நிற்கவே இல்லை.காஷ்மீர்
ஆனந்தவர்த்னரின் “த்வன்யா லோகத்
தை’ சமஸ்கிருதத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தார்.கரிச்சான்குஞ்சுவை
ஜெயகாந்தன் சிம்மம் என்பார்.ஞானபண்
டிதர் என்றும் பிரமிப்பாராம்.
மூத்தமகள் திருமணம் மன்னார்குடியில்
நிகழ்ந்தது. நாங்கள் சென்றிருந்தோம்.
கல்யாணமந்திரங்களைத் தவறாக உச்ச
ரித்துக் கொண்டிருந்த சாஸ்திரிகளை ஏக
வசனத்தில் திட்டிவிட்டு தானே மந்திரங்
களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.மக
ளுடைய கல்யாணத்தில் தந்தையே புரோ
கிதம்.விஷ்ணுபுரத்தில் பள்ளியில் தமிழா
சிரியர்.வழக்கம்போல தரிக்கமுடியவில்
லை.பின் மன்னார்குடியில் இந்தி ஆசிரி
யர்,பின் சமஸ்கிருதப் பண்டிட்,அதன்பின்
தமிழாசிரியர். பாண்டிச்சேரியில் பிரஞ்ச்
மொழி நிறுவனத்தில் நல்ல ஊதியத்தோ
டு வேலை.அங்கு பொறுப்பிலிருந்த தமிழ்
க்கடல் தி.வே.கோபாலையரோடு ஒத்துப்
போக முடியவில்லை.மனம் மாய்ந்துவிட்
டால் அப்புறம் ஆனந்தம்தான் என்பார்.
தன் பெண்குழந்தைகளை உயர்படிப்பு
படிக்கவைப்பதில் ஆர்வம் காட்டினார்.
பெண் குழந்தைகளுக்கு எதுக்கு படிப்பு
என்று அவரது தாயார் மறுத்தார். “இன்
னொரு வீட்டிற்குத் தள்ளிவிடவேண்டி
யவர்கள்தானே” என்பதை லட்சியம்
செய்யவில்லை.தாயார் மகனோடு பேசுவ
தை நிறுத்திவிட்டார்.”என் தலையணைக்
கடியில் பணம் வைத்திருக்கிறேன்.நான்
செத்தா அதைவச்சு என் காரியங்களைச்
செய்.நீ செலவு செய்யக்கூடாது என்று
சொல்லிவிட்டார்.அம்மாவின் எரியும் சி
தையில் தன் பூணூலைக்கழற்றி எறிந்
தார்.
கம்யூனிச ஈர்ப்பு அவரிடமிருந்தது. நம்பி
னார்.பஞ்சகச்சம், குடுமி,விபூதிப்பட்டை
யோடு ஒரு வைதிக பிராமணன் கம்யூனி
ஸ்ட்கட்சி ஊர்வலத்தில் கோஷம் போட்டு
சென்ற புதுமையை கும்பகோணம் வீதி
கள் கண்டன.கரிச்சான் குஞ்சுவிற்குப் புற
வாழ்க்கைபற்றிய சிந்தனை இல்லை.வே
தத்தை நன்கு உள்வாங்கிக்கொண்ட பார
தி போல் இவரும் வேதவாழ்வைக் கடை
பிடிக்க விரும்பியதில்லை.
பேராசிரியர் அ.மார்க்ஸ்,தமிழறிஞர் பொ.
வேல்சாமி முதலானவர்கள் வற்புறுத்த
ஒரு முக்கிய நூலை மொழிபெயர்க்க ஏற்
பாடாயிற்று.கண்களில் பிரச்சனை.கண்
அறுவைச்சிகிச்சை முடிந்தபிறகு தேவி
ப்ரசாத் சட்டோபாத்யாய வின் what is true
and what is dead in indian philosophy” யை
“இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்
பனவும் அழிந்தனவும்’ என்ற பெயரில்
தமிழில் மொழிபெயர்த்தார்.இருநூறு
கதைகள், கு.ப.ரா வரலாறு, பாரதியின்
தேடியதும் கண்டதும் முதலானவை முக்கி
யமானவை.”பசித்தமானிடம்” நாவல் இவ
ரது சாதனை.காதல்,கல்பம்,அகவாசிகள்,
கழுகு, ஒருமாதிரியான கூடல் போன்ற
கதைகள் அற்புதமானவை.
கணேசன்,கிட்டா என்ற இரு பாத்திரங்கள்
வழி,பசித்தமானிடத்தில் கரிச்சான் குஞ்சு
வேபேசினார்.காமம்,பணம்,அதிகாரம்,பசி
காமப்பசி,ஓரினப்புணர்ச்சி என இவற்
றைத் துணிச்சலாகக் கையாண்டார்.”ஏய்
யா இதுக்கு சாகித்ய அகாதமிப் பரிசு
கிடைக்குமா..? என்று கேட்டுக்கொண்டே
இருந்தார்.உறுபசியோடு துளி கௌரவத்
திற்காக அல்லாடிய கரிச்சான்குஞ்சு
எதையும் அடையாமல் காலமானார் என்
பதோர் சோகம்.
சரியா இல்லையா என்பதை அவர்மட்
டுமே சொல்லமுடியும்.”மகிழ்ச்சியின்
போது கோபாலா கோபாலா என்று குதி
ப்பதும்,”ஸா வித் யா விமுக்தயே..எது
விடுதலையை அளிக்கிறதோஅது கல்வி
என்று பேசும்போதும் “அடிக்கடி “வக்காள
ஓளி” என்று வசைபாடுவதுமான ஒரு
பூரண மனிதராகத்தான் கரிச்சான்குஞ்சு
என்ற நாராயணசாமி ஐயரைப் பார்க்க
வேண்டும்
அதிக மனித நேயப்பெருக்கம்.ஒரு சிறந்
த எதிர்காலத்திற்காகப்போராடும்போது
எல்லாவிஷயத்தையும் பழியையும் ஏற்
பது சரியானதுதான்.சொந்த வாழ்க்கை
யையே பணயம் வைக்க வேண்டியிருந்
தாலும் பேரானந்த அனுபவமாகத்தான்
இருக்கும்.வாழ்க்கையை மேலும் அழகு
பொங்குவதாக மாற்றுவதற்கு எல்லாவ
ற்றையும் துறப்பது ஒருவகைப் பிரார்த்த
னைதான்.கரிச்சான்குஞ்சு தமிழிலக்கிய
வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்.
ீ

அருமையான கட்டுரை.. கரிச்சான் குஞ்சு
வோடு பழகியவன் என்ற முறையில்
வரிக்கு வரி ரசிக்க முடிகிறது