26.09.2021
துளி – 219
அழகியசிங்கர்
என் நண்பர் ஒரு முறை பழைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாரதி புதையல் பெருந்திரட்டு.’ வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.
இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத பல புதிய பாரதி பாடல்கள், கதைகள், கட்டுரைகள், பாரதி நினைவுக் குறிப்புகளும், ஏற்கனவே பாரதி புதையல் 1,2,3, நூல்களில் வெளியான விஷயங்களும் அடங்கிய நூல் என்று இந்நூலில் ஆரம்பப் பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி ஆகும்.
வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் 1982ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு விழாவில் வெளிவந்துள்ளது. இப் புத்தகத்தின் விலை ரூ.45. இன்னும் இப் புத்தகம் விற்பனைக்கு உள்ளது.
உடனே ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்து விடுங்கள். இப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி :
நமது “இந்தியா” வின் வாரமிரு முறை பதிப்பு நமது இந்தியா” வாரம் இருமுறைப் பதிப்புக்கு 1500 சத்சாகார்கள் சேர்ந்தால் இவ்வருஷம் மகர சங்கராந்தி முதல் வாரம் இருமுறை பதிப்பிக்குமென்றிருந்தோம்.
அதற்காக நாம் வெளியிட்டிருந்த விளம்பரத்தை அங்கீகரித்து எழுதியவர்கள் இதுவரையில் 579 பேர்களே. வாரம் இருமுறை பதிப்பதென்றால் வேலைக்காரர்கள் முதலான சிப்பந்திகள் இப்போதியிருப்பதைப்போல் இன்னும் ஒரு பங்கு அதிகமாக்க வேண்டும்.
எங்களுக்கு 1000 சந்தாதார்களாவது சேர்ந்தால்தான் இதைச் சரிவர நடத்த முடிபும். நமது விளம்பரத்திற்கிணங்க நமது வாரமிரு முறை பதிப்புக்குச் சம்மதித்துக் கடிதம் எழுதிய அன்பார்ந்த சந்தாதாரர் அனைவருக்கும் நாம் நமது மனப்பூர்த்தியான வந்தனங்கள் செலுத்துகிறோம்.
இனியாவது, மதரது வருஷம் சித்திரைக்குள் மற்ற நேயர்களும் இந்தக் காரியத்தைப் பற்றிக் கவனித்து தங்கள் சம்மதத்தைத் தெரியப்படுத்தினால் நாம் யாதொரு தடையுமின்றி வாரமிரு முறை பத்திரிகை ஆரம்பிக்க சவுகரிமாய் இருக்கும்.
இது விஷயத்தை நமது நேயர்களின் இஷ்டப்படி விட்டிருக்கிறோம். அவர்களுக்கு இத்தகைய மாத்ரு ஸேவையில் இஷ்டமிருந்து நாம் எதிர்பார்க்கிறபடி சந்தா நேயர்கள் முன்னுக்கு வருவார்களானால், இந்தப் புண்ணிய காரியங்களைச் செய்ய எங்களை உதஸாகப்படுத்தியதற்காக நாம் அவர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருப்போம்,
எல்லாம் நமது ஸ்ரீபாரத மாதாவின் திருவருள், தேச ஸேவையே நிறைந்த புண்ணியம் பயக்கும் சிறந்த தருமம். வந்தேமாதரம்! அல்லா ஹோ அக்பர்,

கிடைத்தால் வாங்குவேன் நன்றி