கவிதை

அழகியசிங்கர்

கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் தன்னை
மேதை என்று நினைத்துக் கொள்கிறார்கள்

அதுதான் பிரச்சினை

ஒரு கவிதை எழுதினாலும் மேதை
எண்ணம் துவங்கி விடுகிறது

ஒரு கவிஞர் இன்னொரு
கவிஞரைப் பாராட்டுவதில்லை. ஏன்,?
பாராட்டினாலும் ஏதோ காரணம் வைத்துதான்
பாராட்டுகிறார்கள்

இப்படியே போனால்
கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தாங்களே அச்சடித்துக்கொண்டு தாங்களே அழகு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்