
இன்றைய நவீன விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த கவிதை
சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
போட்டுப் பார்த்துவிட
புகைமூட்டிக் குளிர்காய
காட்டுக் கூட்டமொன்று
கச்சிதமாய் வேலை செய்யும்
சாமியினைப் பிரித்து வைக்கும்
சாலையினைத் தடுத்து வைக்கும்
பேச்சுத்தீ வெறியாலே
சாதித்தீ எரிய வைக்கும்
குத்தீட்டி அரிவாளும்
ரத்தத்தின் சுவை கேட்கும்
பக்கத்து ஊரெல்லாம்
பரவி விடும் சாதி வெறி
உணர்ச்சிக்கு இரை ஆகும்
உள்ளத்தில் அனல் ஏறும்
உயிருக்கு உயிர் வாங்கும்
ஊரெல்லாம் காடாகும்
