பசிக்கே உணவும் படிப்தற்கு நூலும்
வசிக்க இடமும் கிடைத்தும் ரசித்து
நெகிழ்ந்திட நட்பமை யாதிருந் தாலோ
மகிழ்ச்சி இருக்குமோ சொல்.
கோடி நரம்புகள் கொண்ட உடலுக்குள்
தேடிப்பார் ஆழ்ந்த உயிரது நாடியை !
வேடிக்கை செய்வோன் விளையாடும்வித்தையின் வாடிக்கை என்றும் புதிர்.
தெய்வத்தன் மையை உணராதார் நெஞ்சிலே
பொய்மதங் கொண்டே புயல்வீசும் -கைக்குழந்தை பெண்,ஆண் அனைவரும் போர்ப்புகையில் சிக்காமல்
திண்ணமாய்க் காக்கும் இறை.
