தேவதேவன் கவிதை/வான்மழை

ஆழ வேரூன்றிவிட்ட
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும் தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்ற வேண்டும்
அனைத்தையும் விட முதன்மையானது
அதுவும் வான்மழையாக இருக்கவேண்டும் என்பதே

நன்றி: மணல்வீடு பிப். 2022