யோகி – இன்றொரு சேதி….


O
ஞானி ஜே.கே. அவர்களோடு யோகி எங்கே உரையாற்றினார் ?
O
1964ல் ஜவகர்லால் நேரு மறைந்த வருடத்தில் யோகி திருவண்ணாமலையை விட்டு ஜே.கே. அவர்களை சந்திக்க சென்னை அடையாறு சென்றார்.
O
அப்போது யோகி ஜே.கே.யிடம் இடைவிடாது இறைநாமம் கூறுவதும், தங்கள் போதனைகளும் ஒன்றா என்று கேட்டார். எவ்வித தயக்கமும் இன்றி ஆம் என்ற பதில் ஜே.கே.யிடமிருந்து யோகிக்கு கிடைத்தது.
O
இம்முறை யோகி ஜேகே.யை பின் தொடர்ந்து மும்பை சென்றார். அங்கு ஜே.கே. உரையாற்றும் இடம் நோக்கி யோகி செல்லும் வழியில், ஜே.கே.
தமது காரில் யோகியை ஏற்றிக் கொண்டு மேடைக்கும் அழைத்துச் சென்றார்
O
அப்போது யோகியை உரையாற்றுமாறு ஜே.கே. அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும், யோகியின் உரைக்கு நல்ல கரவொலி கிடைத்ததாகவும், பின்னாளில் திரு அப்பன் ஐயங்கார் என்ற பக்தரிடம் யோகி கூறியுள்ளார்.
O
அப்போது மும்பை அருகேயுள்ள கணேஷ்புரி நித்யானந்தா ஆஸ்ரமத்திற்கும் யோகி சென்றுள்ளார். பின்னாளில் யோகியின் வரலாற்றை முதலில் எழுதிய அமெரிக்கர் ட்ரூமென் கெய்லர் அவர்களிடமும். நித்யானந்தா ஆஸ்ரம சாது முக்தானந்தா சுவாமிகளும் யோகியின் விஜயத்தை உறுதிபடுத்தியுள்ளார்.
O
பாம்பின் கால் பாம்பறியும் என்னும் பழமொழிக்கேற்ப ஞானிகளே ஞானிகளை அறிவர். குறைபாடுடடைய மனித பிரயத்தனங்களால் மெய்மையை தரிசித்துவிட முடியாது.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா