
“வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன்
கற்றான் ஒருவனும் பாடு இலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்”
விளக்கம்: 1. அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு அறிஞர் பெருமை அடைதலில்லை.

நான்மணிக்கடிகை பாடல் எண் தரல் நலம்.