பானுமதி.ந
பார்த்து விட்டேன் அவனை
வேலியோரம் ஏதோ போகிறது
நிச்சலனமாகத் தாண்டிப் போகிறான்
பல்லி, ஓணான், பச்சோந்தி, பாம்பு
வேலி தாண்டிப் போவது எதுவோ?
வால் சுழற்றி திரும்பும் அதன் பார்வை
அவனும் அப்படி எண்ணியிருக்கலாம்.
வேலிகள் அகழிகளாக
பல்லிகள் முதலைகள் ஆகலாம்.
