எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரை (மறைமுகமாக) கிண்டல் அடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு யூட்யூப் சானல் (நக்கலைட்ஸ்?!) உருவாக்கியிருக்கும் ஒரு வீடியோத்துண்டு கண்ணில் பட்டது. அசட்டுத்தனமான வன்மத்துடனும், விஷமத்தனமான சித்தரிப்புகளுடனும் உருவாகியிருக்கும் அந்த வீடியோவில் இருப்பது நக்கல் அல்ல, நரகல்.
ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல் அவசரப்படுத்தும் பயணியாக ஒருவர் இந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் முகத்தில் தோசை மாவுடன் ஒருவர் கடந்து செல்கிறார்.
*
எஸ்.ராவும் ஜெவும் எத்தனையோ உன்னதமான ஆக்கங்களை படைத்து தந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் வாசித்து அதைப் பற்றி நேர்மறையாகப் பேச திராணியும் தகுதியும் இல்லை. ஆனால் மலினமாக கிண்டலடிப்பதில் மட்டும் எத்தனை உற்சாகம்? சம்பந்தப்பட்ட யூட்யூப் சானலாவது தனது வருமானத்திற்காக இதைச் செய்திருக்கக்கூடும். இதைப் பகிர்ந்து சிரிப்பவர்களிடம் ஏதாவது ஒரு துளி நுண்ணுணர்வு இருக்கிறதா?
ஜெயமோகன் அவரது தளத்தில் தினசரி எழுதிக் குவிப்பது உள்ளிட்டு ஏராளமான ஆக்கங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் சமூகத்திற்கு ‘தோசை மாவு’ என்னும் சில்லறை சர்ச்சை மட்டுமே பசுமையாக நினைவில் இருக்கிறது என்றால் அது எத்தனை பெரிய இழிவு? உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இப்படியொரு சில்லறைச் சண்டையில் – உங்கள் தரப்பில் தவறே இல்லையென்றாலும் கூட – ஈடுபட்ட அனுபவமே இல்லையா? அதை வைத்து ஒருவர் உங்களை குத்திக் கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்?
எஸ்.ரா. ஜெயமோகனுக்கு மட்டும் இதைச் சொல்லவில்லை. நம் சமூகத்தை மேலே நகர்த்திச் செல்லும் ஏராளமான சிந்தனையாளர்கள், கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டக் கூட வேண்டாம், குறைந்தபட்சம் அரைகுறைப் புரிதலுடன் மலினப்படுத்தாமலாவது இருக்கலாம். வெறும் சில்லறை வம்புகளில் ஈடுபட்டிருக்கும் தாழ்வுமனப்பான்மையின் எதிரொலிதான் இவ்வகையான கிண்டல்கள்.
இந்த உலகத்தில் உள்ள எவருமே விமர்சனத்திற்கோ, கிண்டலுக்கோ அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று நம்புகிறவன் நான், ஆனால் அப்படிப்பட்ட ஆக்கங்கள், சம்பந்தப்பட்டவரைக் கூட ரசிக்க வைக்கும் அளவிலான குறைந்தபட்ச தரத்துடன் இருக்க வேண்டும்.