மனுஷ்ய புத்திரன் கவிதை

சிலர் பேசாமல் இருந்தால்
பேசக்கூடாதென்னும்
வைராக்கியத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்

சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்

சிலர் பேசாமல் இருந்தால்
பேசச் சொற்களற்ற அன்பினால்
ததும்பிக்கொண்டிருக்கிறார்கள்
என்று பொருள்

சிலர் பேசாமல் இருந்தால்
என்னிடம் பேசவேண்டிய சொற்களை
வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்
என்று பொருள்

அன்பே
நீ ஏன் என்னிடம்
பேசாமல் இருக்கிறாய்?

One Comment on “மனுஷ்ய புத்திரன் கவிதை”

Comments are closed.