என்னப் பெத்த ஆத்தா/ஆர்க்கே

ஏதோ கோவம் கத்திப்புட்டேன்.
யாரோ சொன்ன பேச்சுக்கு
உன்னைப்போய் திட்டி வச்சேன்.
என் கையலாகாத்தனத்துக்கு
உன் கண்ணை குத்தி வச்சேன்.
எவன்கிட்டயோ தோத்ததுக்கு
உன்கிட்டப்போய் சண்டை போட்டேன்.
நாந்தான் ஒன் வயித்துப்புள்ள
நீ வளத்த புள்ள
எத்தனையோ தாங்கிக்கிட்டே
எனக்காக.
இந்த பிள்ளைக் கத்தின சொல்லெல்லாம்
உன் கண்ணாடி மனசுடைச்ச கல்லாச்சா
என்னப் பெத்த ஆத்தா!
சோறு தண்ணி இல்லாம
தொறந்த கண்ணு மூடாம
முகமெல்லாம் அளுதளுது
இப்படியா ஒடஞ்சு போவே
நாந்தான் சிறுபுள்ள
என்னை மன்னிச்சு மடிசேத்துக்கோ.