
நேற்றின்
ஜீவித கணங்களில்
வாழும் மனதை
இன்றின் சலனங்களுக்கு
பழக்க முடியவில்லை.
வலைக்குத் தப்பிய
மீன் கூட்டம் போல
போக்குக் காட்டி
போக்குக்காட்டி
போகின்றன.
கனவுகளை பிய்த்தெறியும் மூர்க்கங்களை
கட்டவிழ்த்து விடும்
இன்றின்
கணங்களைப்
புறந்தள்ளியபடி
நாளையின் நாட்களை
இன்றைக்கு கணக்கெடுப்பது
வாடிக்கையாயிற்று.
எல்லாம் கடந்து போகும் என்றிருந்தவனைக்
கடந்து போயிற்று
காலம்.
இனி
கோர்க்கப் பழகவேண்டும்
நேற்றிலிருந்து இன்றைக்கும் இன்றிலிருந்து
நாளைக்குமான
மாயக் கயிற்றில்
பெருஞ்சலனம்
உருவாக்கிய
முத்துக்களை.
.

“மாயக் கயிற்றில்” இந்த மாயக் கயிறுதான் வாழ்க்கையா? சில சமயங்களில் ஆம் என்றும், ஆழ்ந்து யோசித்தால் இல்லை என்றும் படுகிறது. This between here and there…..What to do? We have to get on and get going. Thanks.