
குறுஞ்செய்திகள் அனுப்பினான்
குமுறிக் குமுறி அழுகிறாள்
இருதயங்கள் இறுக மூடியிருக்கின்றன.
துளிக்கடல்
துள்ளுகின்றன கனவுகள்
தூண்டிலோடு கரையில் அமர்ந்திருக்கிறார்கள்
யாரோ வருகிறார்கள்
யாரோ போகிறார்கள்
யாரோ இருக்கிறார்கள்
நாடே கதின்னு சிலர் கிடக்கிறார்கள்
வீடே கதின்னு சிலர் இருக்கிறார்கள்
பலர் கதி எவர்க்கும் பொருட்டில்லை
பூனை கத்துகிறது
பசிக்கவில்லை
இறந்து போன அவனைத் தேடுகிறது
நான் தவறு செய்யவில்லை
மனதுக்கு நேர்மையாக நடக்கிறேன்
நீ குற்றம் சாட்டுவது தான்
என்னைக் களங்கப்படுத்துகிறது
கண்ணகியின் கோபம் நியாயமானது
மதுரையை தீக்கிரையாக்காமல் இருந்திருந்திருக்கலாம்
புற்களோடு நெற்பயிர்களும் கருகிப் போயின.
போதைப் பாக்குகள் தாராளமயம்
மெது விஷம் விற்பனை படு ஜோர்
சுகித்துப் புகைகிறது தேசம்.
🦀
