
இந்தத் தெருவில் இருக்கிற அவருடைய வீட்டுக்கு
முதல் தடவை வருகையில்
தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம் சாய்ந்திருந்தது ஒரு சுற்றுச் சுவரில்.
கடைசி வீட்டுத் தாழ்வாரத்து்
பிரம்பு நாற்காலி முதியவளின்
மடியில் ஒரு பூனை இருந்தது.
அடுத்த தெரு வழியாகத்தான் இந்தத் தெருவுக்கு வருகிறேன்
அதற்குப் பின் ஒவ்வொரு முறையும்..
%
2021
