கென் சென், ஜுவெனிலியா கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

நேற்று இரவு
என் உணர்வுகள்
காதில் விழுமளவிற்கு
எனது உள்ளம்
அமைதியாக இருந்தது.
எதிர்பாராமல்
தொலைபேசி மணி ஒலித்ததும்
அழைப்பது
என்னுடைய இதயம்தான்
என்று எண்ணினேன்.