
அவர் அதிசயமானதொரு உலகத்தில்
பிரவேசித்தார்.முழுமைக்குச் சமமாக
இல்லாமல்போனாலும் சிலநேரம் முழு
மையைவிடப் பெரிதாகும் உலகம்.அந்த
மகத்தான உலகில் இருந்து கொண்டு
‘நித்யகன்னி’யைப் படைத்ததாகக் கூறு
வார்.தன்னால் செய்யமுடியாதது எல்
லாம் தன்னைவிட உயர்ந்ததாக இருக்க
முடியாது என்ற வாசகத்தை உடைத்துப்
போட்டார்.அறிவிலிருந்து கேட்கும் கேள்
விகளைவிட அறியாமையிலிருந்து பிறக்
கும் கேள்விகள் உண்மையானவை.அறி
யாமையின் அழகு என்ற ஒன்றிருக்கிறது
என்பார்.
வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய
மாதவி கானகத்திற்குத் தவம் இயற்றப்
புறப்பட்டாள்.இந்தப்பிரிவு இதயத்திற்கும்
உணர்ச்சிகளுக்கும் போதுமான கனவு.
இது கௌரவமானது.நித்யகன்னியின்
பிரதான அறிவிப்பு பெண்விடுதலை.
அறிமுகமான தத்துவமே. தன்னுடைய
அகத்திலும் புறத்திலும் நடத்தும் போரா
ட்டங்களை உதாசீனப்படுத்திவிட்டுப் புது
மொழியில் எழுதுவதாக அறிவித்தார்.
புனிதம் என்பது ஏன் பெண்குறிகளோடு
சம்பந்தப்பட்டதாக மாற்றப்பட்டது.தர்மம்,
நீதி,அறம் என்பன ஏன் வறட்டுச் சொற்
களாக கட்டப்பட்டன என்பார்.
‘வேள்வித் தீ’ கள்ளக்காதல்கதை என்ற
ஒற்றைவரியில் விளக்கிவிடமுடியாது.
பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையைத்
துல்லியமாகக் கூறும் ஒரு சித்திரம்.அறம்
என்பது எளியமக்களுக்காகவே சொல்ல
ப்பட்டது என்ற கருத்தும் தொடர்ந்து ஊடா
டிவரும்.வாழ்க்கையே வேள்விதான்.உண்
மையில் வாழ்வின் பெரும்பகுதி கோபம்,
பரபரப்பு,சோர்வு,இல்லாமை,முதலானவ
ற்றாலேயே அழிந்துவிடுகிறது.சொற்ப
காலவாழ்வு என்பது இக்கட்டான ஒன்று
தான்.இதில் தர்மசாஸ்திரங்கள் ஏகப்பட்ட
அழுத்தங்களைக் கொடுக்கின்றன.இது
ஏழைகளுக்கு விதிக்கப்பட்ட கணக்கு.
சாகித்யஅகாதமி விருதுபெற்ற ‘காதுகள்’
தன் நாவல் குறித்து எம்.வி.வி பேசுவார்.
என் நாவல் என் வாழ்க்கை. இந்தவாழ்க்
கை உங்களுடையது போன்றதல்ல.பகு
த்தறிவை நம்புகிறவர்களுக்கு இது மிகத்
திகைப்பைத்தரும்.அதற்கு நான் என்ன
செய்ய? காதுகளின் கதாநாயகன் மகாலி
ங்கம்.மகாலிங்கம் நானாகிய இந்தவெங்
கட்ராம்தான் என்று நெஞ்சை நிமிர்த்தி
க்கொண்டு சொல்வார்.மாலியின் காது
களில் திடீரெனக் கெட்டகுரல்கள்,ஆபாச
மாகவும் வக்கிரமாகவும் கொடூரமாகவும்
ஒலிக்கத் தொடங்கின.கோரமான உருவ
ங்களும் சூழ்ந்திருந்தன.முருகப்பெருமா
னை வழிபடக்கூடாது தன்னைத்தான்
வழிபடவேண்டும் எனக்கட்டளை இடு
கிறது ஒருகுரல்.காதுகள் நாவலின் சாரா
ம்சம் குறித்து எம்.வி.வி விளக்குவார்.
“என்னுள் நடந்தது”
ஆண்பெண் இருவருக்குமே விடுதலை
தேவை.பெண்ணை அடிமைப்படுத்தி
யிருக்கும் ஆணும்கூட அடிமையாகிவிடு
கிறான்.எனவேதான் கூன்விழாத எந்த
ஆணையும் பார்க்கவே முடிவதில்லை.
இதன்காரணமாக நொடிக்கொருதடவை
விபத்தைச் சந்திக்கிறோம்.இதுவே பழ
கியும் போய்விடுகிறது. முழுமையான
வாழ்வு என்பது இல்லை.எம்.வி.வி வாழ்க்
கை சிக்கலான ஆட்டம் என்பதை ஏற்வில்
லை.ஆன்மாவைக் கடந்தகாலத்திலிரு
ந்து விடுதலை செய்யவேண்டும். இந்த
முயற்சி இயல்பானதுதான்.தன் காதுகளி
ல் வந்து தொந்தரவு செய்து கொண்டி
ருந்த விகாரமான ஒலிகளைஆராய முய
ன்றார்.அதன் அனுபவங்களை எழுதினா
ர். எம்.வி.வி அதிகமாக அறியப்படவில்
லையோ என்ற ஐயம் இருக்கவே செய்கி
றது. இலக்கியம் பெரும்பான்மையான
வாக்குகளால் நிர்ணயிக்கப்படுவது இல்
லை.
–மீள்*
