எம் டி முத்துக்குமாரசாமி கவிதை

பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென
அவர் கணித்திருந்தார்
அவள் கண்ணோடு தன்
கண் மோதுவதை
தவிர்த்திருந்தார் எதற்காக
இப்போது வந்திருக்கிறாள்?
முன்பு வந்திருந்தபோது
கருப்பட்டி காப்பியை
தோசையில் ஊற்றி
மிளகாய்ப்பொடியை
நல்லெண்ணையில் குழைத்து
தொட்டுக்கொண்டு
இனிப்பும் காரமுமாய்
அவர் சாப்பிடுவதைப்
பற்றி பேசினாள் இனி
கசப்பும் இனிப்புமா?
அவர் சமையலறையை விட்டு
வெளியே வந்தார்
ஒரு குடை மடக்குதலுக்கும் விரித்தலுக்கும்
கருப்பட்டி காப்பிக்கும் பாவக்காய் பிட்ளைக்கும்
இடையே இருபது வருடங்கள்
அவர் நிமிர்ந்து அவளைப் பார்த்தார்
அவளுடைய நரையோடிய முன் முடிகளில்
வியர்வை அரும்ப பெண்ணில்லாத
அவர் வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தாள்
சுவரோரத்தில் போன முறை
வெயிலுக்கு விரிய மறுத்த குடை