
நிரம்பித் ததும்பும் ஒளிக்குள்
ஓடுங்கிய நிழலாய்
நிறைவேறா மனப்பொழுது தத்தளிப்பது
ஒவ்வொரு நாளும் வெளியரங்கவே
சாட்சியமாகித் தொலைகிறது
என் ஒற்றை வாழ்நாள்
தேவைகளின் நெரிசலில்
சுவாசத்தின் தூயமிதப்பை வேண்டி
நிலையற்று சுற்றித் திரிகிறது
பகலறியா கனவின் சிறுதுளி
உறைந்த பளிங்காய் மாறிய
சேகரமாகாத கடந்தகாலம்
அனுபவித்திராத மெய்ம்மையின் துகளாகி
வயதின்மேல் ஒவ்வொன்றாக படிகையில்
யாருடனும் பகிராத இவ்வேளையும் எனக்கானதே.
