என்பா 61
நனைந்தசிறகு உணவில்லையெனினும்
மழையை
வெறுப்பதில்லை
வாழ்வில்
சோதனை
மழைபோல்
இயற்கையே
பறவைபோலன்றி
சோதனையை
வெறுப்பதேன்
மனிதன்
வாழ்க்கையில் போராடு வெற்றிபெறு.
என்பா. 62.
எங்கள்
வீட்டில்
கொலு
வைத்துள்ளோம்
கடவுள்கள்
மட்டும்
மனிதர்கள்
யாருமில்லை
இடைவெளி
இல்லா
கொலுவுக்கு வருவதில்லையாம்
இன்று நவராத்திரி மூன்றாம்தினம்.
என்பா 63.
செக்கிங்இன்ஸ்பெக்டர்
வராம
டிக்கெட்
வாங்கமாட்டாங்க
இப்பகாசில்லாத
டிக்கெட்ட
சண்டைபோட்டு
வாங்குறாளுக
நாட்டுல
நிறையபேர்
நல்லவங்களா
ஆயிட்டாங்க
அரசுப்பேருந்து
நடத்துனரின்
புலம்பல்.
