
அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.
பெரிய சாக்கில் கண்ணில் படுகிற காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டு வருவான்.
பெரும்பாலும் இரும்பைப் பொறுக்கி எடுப்பதற்குத்தான் அவனுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதில்தான் பணம் அதிகமாகக் கிடைக்கும்.
அன்று ஒரு பர்ஸ் குப்பைத்தொட்டியில் கிடைத்தது. 20 ஐந்நூறு ரூபாய்த் தாள்கள்.
அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனைக் கவனிக்கவில்லை.
போலீசிடம் ஒப்படைத்து விடலாமா?
காவல்துறை நிலையம் வரைப் போனான். நிலையத்தை நெருங்க நெருங்க அவன் மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது.
ஒரு நிமிடம் நின்றான். ஒரு நிமிடம்தான். அதன்பின் அவன் தாண்டிப் போய் விட்டான்.
