
என்பா 74
முகிழ்தல் தலைப்பில்
எழுத வருவதில்லை
கவிதை என்றெண்ணி
ஒதுங்க நினைத்தேன்
எல்லோரும் என்னைப்
பிடித்துக் கொண்டு
எழுது முகிழ்தல் என்றனர்
என்பா 75
மழை பெய்தால்
எதிர்பாராத அன்று
முகிழ்தல். கன்னத்தில்
குமிழ் விடும் சிரிப்பு
தோன்றினால் முகிழ்தல்தான் எனக்கோ
உனக்கோ நமக்குள்
என்பா 76
தெருவில்
மஞ்சள் நிறப் பூக்கள்
முகிழ்கின்றன
பார்க்கப் பரவசமாய்
இருக்கின்றன தினமும்
பந்து விளையாடுகிறார்கள்
சிறுவர்கள். பந்தை மட்டையால் அடிக்கிறார்கள் ஓங்கி
என்பா 77
அந்த மீன்காரி
மீன்களை அள்ளிக்
கொண்டு வருகிறாள்
துள்ளிக் குதித்தபடி
வரும் பூனைகளிடம்
முகிழ்கின்றன திருட்டுத்தனம்
கூடவே காக்கைகளிடமும் முகிழ்கின்றன
என்பா 78
என்னுள் முகிழ்ந்தது
என்பா என்றேன்
தன்பா என்பா
என்னுள் முகிழும்
பாபா என்றேன்
மகிழ்ச்சிப் பொங்க
வாவா என்றேன்
சரியா..
