ஆராரோ ஆரிராரோ / சுரேஷ் ராஜகோபால்

என் குழந்தையின்
மின்னல் கண்ணொளி தேடி வந்தேன்
தூக்கம் கண்ணைச் சுற்றக் கண்டேன்
மடிமீது போட்டுத் தட்டியே
தாலாட்டு பாடவும் செய்தேன்

முதல் பாடலுக்கு அடங்கவில்லை
ராகம் மாற்றி வேறு பாடலாக்கியும்
விவரம் புரிந்த குழந்தை
பல் காட்டி சிரித்தது

மடிமீது போட்டுத் தட்டினால்
எழுந்து ஓடவும் செய்தது
என்னைக் கூட ஓடிவரச்
சொன்னது; சிரித்துக் கொண்டே

சிறிசுக்கும் சலிப்பில்லை
பெரிசுக்கும் அலுப்பில்லை
அப்படியே வழியில் படுத்துத்
தூங்கியது கண்ணயர்ந்து

One Comment on “ஆராரோ ஆரிராரோ / சுரேஷ் ராஜகோபால்”

  1. மழலையின் குறும்பு
    திகட்டாத கரும்பு
    மலராத அரும்பு
    மதிமயங்க விரும்பு
    அருமை கவிதை
    அனுபவ கவிதை
    கொள்ளை கொள்ளும் மனதை

Comments are closed.