லட்சுமி கல்யாணம்/ஜெ.பாஸ்கரன்

நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.

உறவினர்கள், நண்பர்கள் ஆச்சரியப்படும் விதத்தில், கல்யாண ஏற்பாடுகளைத் தான் ஒண்டியாகவே செய்துகொண்டிருந்தாள்! கேட்டரிங், முகூர்த்தப்புடவை, திருமாங்கல்யம் எல்லாம் தானே தன் கைப்பட செலவு செய்து வாங்கியிருந்தாள். ஆடம்பரம் இல்லாமல் கோயிலில் திருமணம்.

மிகவும் நெருங்கிய நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தாள் லட்சுமி.

தாலி கட்டியவுடன், அப்பாவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்.

இனி அப்பா தனியில்லை – சித்தி லட்சுமி கவனித்துக்கொள்வாள்.