
என்பா – 88
முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!
என்பா – 89:
கற்பனை முகிழ்ந்தால் கவிதை ஆகலாம்!
காதல் முகிழ்ந்தால் இதயங்கள் இணையலாம்!
கதிரவன் வரும்முன் அரும்புகள் முகிழுமா?
காய்கள் கனியுமுன் வெம்பும்!
என்பா – 90:
புள்ளினத்தின் பாட்டுக்கு இலைகள் தலையாட்ட,
மீண்டும் காற்று மெல்லிசையாய்த் தாலாட்ட,
புத்துணர்வுப் பூக்களென மரங்களின் மெய்சிலிர்க்க,
பருவ எழிலாளின் கூத்து!
