மாதிரிப் போலிகள்…

சு. விக்னேஷ்


என்னை மாதிரி வெண்மை

இந்த மலைகளுக்கு இல்லை

என்னும் மேகங்கள்

கருமையைக் கடலிடம் கடன்வாங்குகின்றன…


என்னை மாதிரி பசுமை

வெய்யிலுக்கில்லை என்னும் செடிகள்

அதே வெய்யிலில் பழுத்து உதிர்கின்றன…

உண்மையில்நம்மைப் போல யாருமில்லை…

நம்மைப் போல யாருமில்லை என நினைப்பதில்தான்

நாம் மற்றவர்களைப் போலாகி விடுகிறோம்.

One Comment on “மாதிரிப் போலிகள்…”

Comments are closed.