
வயதானவர்களுக்கு அறுவை செய்வதற்கு வைத்தியர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். நோயாளியின்
பிரச்னையை தீர்ப்பதை விட இந்த அறுவை சிகிச்சையின் பாதகமான விளைவுகளால் தங்கள் நற்பெயருக்கு ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற கவலை தான் அவர்களை அதிகம் யோசிக்க வைக்கிறதோ!
உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாவென்று தீர்மானிக்கும் பொறுப்பை இன்னொரு நிபுணரிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் வயதானவர்களுக்கு சாமான்யத்தில் ஒப்புதல் அளிப்பதில்லை. பலவித உபாயங்களால் உடம்பைத் தயார் செய்கிறார்கள் மேடைக்கு நடிகனைத் தயார் செய்யும் மேக்கப் காரர்களைப் போல..
அறுவைசிகிச்சை முடியும் வரை என் இருதயத் துடிப்பை தொடர்ந்து சரியாக நிலை நிறுத்துவது அவர்கள் பொறுப்பு!! இதனால் அறுவைசிகிச்சை நிபுணருக்கு ஓரளவு நிம்மதி!
என் அனுபவத்தில் சில நிபுணர்கள் முதல் பரிசோதனையிலேயே
“இவருக்கு வயசாச்சு!…இதெல்லாம் தாங்காது..” என்று சொல்லி தங்களைக் கழட்டிக் கொள்ளுகிறார்கள்.!!
இப்போது இவ்வளவு பிரயாசையுடன் இந்த உயிரை நீட்டிக்க வேண்டுமாவென்று தோன்றுகிறது
பொம்மலாட்டக் கயிற்றிலிருந்து விடுபட்ட பொம்மைகளின்
நிம்மதி எவ்வளவு சுகமாக இருக்கும்?
எனது அன்பும் கனிவும் மிகுந்த நேயர்களுக்கு மனமார்ந்த நன்றி........
...

Good one bosd