வரிசை/சுரேஷ் ராஜகோபால்

இறந்த பல்லி உடலைச் சுற்றி
எறும்பு ஊர்வலம்
பகுதி பகுதியாகக் கடித்துப்
பிரித்து எடுத்துச் செல்லும்
ஒரு ஒழுங்கு வரிசையாக.

அதன் வரிசைக்கு யாரும்
மேற்பார்வை கிடையாது.
யாரும் காவலும் கிடையாது
ஒழுங்கு தப்பிப் போகாது
கடமை தவிர வேறு தெரியாது.

One Comment on “வரிசை/சுரேஷ் ராஜகோபால்”

  1. எறும்புகள் யாருடைய
    புகழ் மொழிகளுக்காகவும்
    காத்து நிற்பதில்லை. அப்படியும் அவற்றுக்கு
    கிடைக்கின்றன ‘வரிசை’ போன்ற சிறந்த, முகஸ்துதி
    அல்லாத உண்மையான
    புகழ் பரப்பும் கவிதைகள்.

Comments are closed.