தி.ஜானகிராமன் கலை/நா. விச்வநாதன்

அருவெறுப்பானதை மறைக்கவும்,அழகானதாக சிலவற்றைத் தூக்கிப்பிடிப்பதும்,
இதற்காக நடிக்கவும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எதுவாக இல்லையோ
அதுவாகக் காட்டிக் கொண்டு உண்மை நிலையை மறைத்துவிடுவது மனச்சிதை
வை ஏற்படுத்திவிடக்கூடும்‌.நம்முள் நடக்கும் உள்நாட்டுப்போர்.இப்படியான அர்த்
தமற்ற போரை நடத்திக்கொண்டு வாழ்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை எளிது;சிக்கலற்றது.பனிமூட்டம்போல மறைந்திருப்பதை விலக்கி
விட்டால் கண்கள்கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் பாய்ந்துவிடும்.தி.ஜானகிராமனின்
எழுத்து இதைக் கொண்டு வந்துவிடும். தி.ஜா வின் எழுத்தைப் புரிந்து கொள்ளா
விடில் வக்கிர எழுத்து என்று பேசும் பேரவலம் நேர்ந்துவிடும்.நேர்ந்தது.
‘அம்மாவந்தாள்’ நாவல் வந்தபிறகு ஆச்சார சீலர்களால் கண்டனமானது.மோக
முள்ளுக்கும் இது நேர்ந்தது‌.மாபெரும் இதிகாசங்களான இராமாயண மகாபார
தத்தின் பாத்திரங்களுக்கு இதனால்தான்மரபாளர்கள் ஒருவிதத் தெய்வத்தன்மை
ஏற்றி அவர்களின் மனம் புலம்புவதைக் கேட்கவிடாமல் செய்தனர்.எது புனிதம்
எது புனிதமல்ல என்பதற்கான விவாதமே என்றும் இல்லை. அப்படியே ஏற்பது.
ஆன்மிகத்தோடு இணைத்துவிட்டால் கேள்விகளே இல்லை. அகலிகை,குந்தி,
சூர்பனகை, யமுனா ருக்மிணி அலங்காரத்தம்மாள், அம்மிணி என எல்லோருமே
ஒருவர்தான்.அசூயை ஏற்று வாழ்தலின் அழகை வெளிப்படையாகச் சொல்வது
மரபல்ல என்றானது. கற்பை ஏன் பெண்குறிகளோடு சம்பந்தப்படுத்தினர் என்ற
கேள்வி இருக்கிறது.ந.பிச்சமூர்த்தி,மௌனி,எம்விவி,கு.அழகிரிசாமி ,புதுமைப்பித்தன்
போன்றோருக்கு ஆண்பாத்திரங்கள்.தி.ஜா விற்குப்பெண் பாத்திரங்கள்.கு.ப.ரா விடமிருந்து
பெற்றது.

எழுத்தாளன் உபதேசியார் அல்லன்.எல்லாவற்றையும் பேசுவதுதான்.நமக்கான
சிக்கல், இலக்கியம் என்பது அறம்போதிப்பதுதான் என்ற கருத்து நிலைபெற்றது
என்பதுதான்.இத்தனை மரபுத்தடைகளைத்தாண்டித்தான் எழுதவேண்டிய நிர்ப்பந்
தம். தி.ஜா உடைக்கிறார்.மோகமுள் ஒரு பெண்ணின் தகிப்புதான்.இப்படித்
தகித்துக் கருகிக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாரதவர்ஷத்துப்பெண்களின் பிரதிநிதி
தான் யமுனா.மோகத்தை வலிமிகுந்ததாக பக்தி இலக்கியங்களும் பேசும்.
ஆண்டாள், ராதை,மீரா நம் சங்க இலக்கியப்பசலை படர்ந்தபெண்கள். தகிப்பு பெண்
ணின் அழகிய அணிகலன். உச்சபட்ச கொதிநிலையில்தான் பெண் அற்புதமா
கக் தரிசனம் கொடுக்கிறாள்.பெண் என்பவள் போகப்பொருள்தான் என்ற சகஜ
மான கருத்து கோலோச்சிய காலத்தில் யமுனா வின் குரல் கலகக்குரல்தான்.
அது என் உரிமை என்கிறாள்.நம்மையே நமக்குச் சிலநேரம் அடையாளம்
தெரிவதில்லை.அதனால்தான் நம் அழகும், கம்பீரமும் நளினமும் நமக்கே தெரியவில்லை.
நமக்குத் தெரிந்தபோது அதன் இதயத் துடிப்பு துல்லியமாகக் கேட்கிறது.
கண்களின் ஆழம் தெரிகிறது.அது பிரபஞ்ச இசையோடு ஒத்திசைகிறது.சபிப்பதை
யும் நிந்தனைகளையும் கேட்டே பழக்கப்பட்டவாசகனுக்கு சட்டென ஜானகிராமன்
பிடித்துப்போகிறார்.

அலங்காரத்தம்மாளின் அதீத வேட்கை குற்றமற்றது என்ற மனோபாவம்
வருகிறது. நம்குடும்பத்தில் ஒருத்தியாக அதி மேன்மை பொருந்தியவளாக ஏற்க
முடிகிறது. ஜானகிராமனின் மாய எழுத்து. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொள்
வதைப்போலக் காலத்தின் கசிவைப் படைப்பாற்றல் உள்ளுக்கிழுத்துக் கொள்
கிறது.மனிதர்களைக் கொண்டாடுவது அலுப்பூட்டுவதன்று என்ற பூரிப்பு வருகி
றது.லா.ச.ரா அழகானதை ஆராதனை செய்கிறார்.ஜானகிராமனோ ஆராதனை
வாயிலாக ஒன்றை அழகாக்குகிறார். ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு நறு
மணம் உண்டு.சுவைகளும் உண்டு. அம்மாவந்தாளின் சுப்புவும்,அலங்காரமும்
சிவசுவும்,பாபுவும் யமுனாவும் அம்மிணியும் என வரிசைப் படுத்தலாம். சம்பாஷ
னைகளின் பலம்தான் தி.ஜா வின் எழுத்தை மேலும் மேலும் மெருகேற்றுகின்றது.
கண்ணியத்திற்கும் ஆபாசத்திற்குமான இடைவெளி மிக நுண்ணியது.நுட்பமான
து.அவர்கண்டுபிடித்தது.எனக்கே எனக்கு என்று சொல்கிற எழுத்துதான்.ஆனால்

எல்லோருக்குமானதாகிறது.