ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 14

10.10.2021


அழகியசிங்கர்


அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா?

  அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன்.

ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா?

அழகியசிங்கர் : ஆமாம்.  இதெல்லாம் நடத்துவது கடினம்.

மோஹினி :  திரு ஆர் நடராஜ் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், திரு ரமணன் பொறுப்பாசிரியர் கல்கி இணைய இதழ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச்செய்தார்கள்.  

அழகியசிங்கர்: ஆமாம்.  நானும் பேசினேன்.  சரியாகப் பேசினேனா என்று தெரியவில்லை.  ஆனால் சைதை துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தாரென்றால், நான் தெரு என்ற கதையைப் பற்றிச் சொல்வதாக இருந்தேன்.

ஜெகன் : கூட்டம் எப்படி இருந்தது

அழகியசிங்கர் : சிறப்பாக இருந்தது.  நண்பர்களைச் சந்தித்தேன். அதுதான் முக்கியம். 

மோஹினி : கேடயத்தை எங்கே வைத்தீர்கள்.

அழகியசிங்கர் : மனைவியிடம் கொடுத்தேன்.  கொலுவில் வைத்துவிட்டார்.  கொலு பொம்மையாக அது மாறி விட்டது.  இந்த முறை மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குப் போய் தமிழ் நூல்களைப் பார்த்தேன். 

ஜெகன் :  இதுவரை போனதில்லையா?

அழகியசிங்கர் : இல்லை.

மோஹிணி :  இன்று டெய்லியில் போஸ்டிங்க அதிகமாகப் போடவில்லை என்று நினைக்கிறேன்.

அழகியசிங்கர் : ஒரு நாளைக்கு ஆறுக்கு மேல் போஸ்டிங் இட வேண்டுமென்று நினைக்கிறேன்.

ஜெகன் : குறைந்தது 200 பேர்களாவது பார்க்கிறார்கள்.

அழகியசிங்கர் : ஆமாம்.. 

மோஹினி : நாளை சந்திப்போம்.

அழகியசிங்கர் : ஓகே.


4 Comments on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 14”

  1. மனையழகு நூலகம்
    கையழகு புத்தகம்
    வினையழகு திருத்தம்
    சொல்லழகு சுருக்கம்
    மனஅழகு அடக்கம்
    எனப்பழகு; நிறையும்

Comments are closed.