
காலை கண் விழித்ததும்,
சில வேண்டுதல்கள்
முன் வைக்கலாம் எனத்
தோன்றியது.
பசி எடுத்து, ருசி அறிந்து விரும்பியதைச்
சாப்பிட முடிய வேண்டும்
காலை கண் விழித்ததும்,
சில வேண்டுதல்கள்
முன் வைக்கலாம் எனத்
தோன்றியது.
பசி எடுத்து, ருசி அறிந்து விரும்பியதைச்
சாப்பிட முடிய வேண்டும்.
பாயோ, பஞ்சணையோ.. படுத்தவுடன்
தூக்கம் வர வேண்டும்.
வாழ்விலும்,தாழ்விலும் கூடவே நிற்கும்
நண்பர்கள் சிலராவது
கூடவே வர வேண்டும்.
வாழ்க்கை ஒரு வட்டம்தான்,
ஆனாலும், தொடங்கிய இடத்தில் முடிவது இல்லை.
இன்னுமொரு புத்தாண்டு,
வேண்டுதல்கள் பலிக்குமென
நம்பித் தொடங்கலாம்!!!.

வேண்டுதல்கள்
பலிக்கும்
அற்புதம் நண்பா.
“பசி எடுத்து, ருசி அறிந்து விரும்பியதைச்
சாப்பிட முடிய வேண்டும்”
என்ற வரிகளை இரண்டு முறை எழுதி இருக்கிறீர்களே, டில்லி வெயிலில் பசி அதிகம் எடுக்கிறதோ?
உங்கள் எல்லா வேண்டுதலும் நிறைவேற எனது வாழ்த்துக்கள்!
சொல் புதிது குழுவில் பதிவு செய்ததை எடுத்து இங்கு பதிவு செய்யும் போது, இருமுறை வந்து விட்டது என நினைக்கிறேன். தவிர, நீங்கள் சொல்லுவதும் சரிதான், அதிக வெயி லில், அதிகம் பசிக்கத்தான் செய்கிறது.
காலையில் நண்பர் கண் விழித்ததும் காண விழைந்த Wish u கனிகள் கையில் கிடைக்க வாழ்த்துகிறேன்
எஸ் சுரேஷ்