
.
கவிஞர் மீராவினுடைய அத்தனை செயல்பாடுகளும் ஒரு சிறுபத்திரிகையாளனின் உழைப்பு. இன்று இருக்கக்கூடிய மிகப்பெரு எழுத்தாளர்களெல்லாம் அங்கிருந்து வந்தவர்கள்தாம். நாஞ்சில்நாடன் தொடங்கி பூமணி, கோணங்கி, ஜெயமோகன் போன்று எல்லோரும் மீராவினுடைய கண்டுபிடிப்பே.
ஆனால் மீரா அவை அனைத்தையும் சம்பாதிக்கவில்லை. அந்த பலன்களையெல்லாம் பின்னாட்களில் வந்த காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள்தான் அறுவடை செய்தன. அந்த விஷயத்தில் மீரா துரதிர்ஷ்டசாலிதான். ஆனால் மீராவின் ‘அன்னம் அகரம்’ கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு வேறு எதற்கும் இருந்ததில்லை என்பதே உண்மை.
க்ரியாவில் எல்லாமே Royal prize தான். அவ்வளவு கறாராகவும், அச்சில் அந்த கூர்மையும் கொண்டும் அவற்றை ஜனரஞ்சகமான புத்தகங்களாக கருத இயலாது. காரணம் – அதிக விலை – ஒரு நூறு பக்க புத்தகத்தை இருநூறு ரூபாய் கொடுத்து இயல்பாய் வாங்கத் தோன்றாது. ஆனால் ஹெப்சிபா ஜேசுதாஸினுடைய ‘புத்தம் வீடு’ நாவல் வெறும் பத்து ரூபாய்க்கே கிடைத்தது.
நாஞ்சில் நாடன், பூமணி இவர்களது படைப்புகளெல்லாம் முக்கியமானவவை. இன்றைக்கும் கி .ராஜ நாராயணன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் ‘அன்னம் அகரம்’ என்பதை மறுக்க முடியாது. ஆக, பதிப்புலகில் மாபெரும் புரட்சியை செய்தது ‘அன்னம் அகரம்’ தான். எவ்வாறு திரையுலகில் ஒரு பாலச்சந்தர் பாரதிராஜாவோ அது போல பாதிப்புலகில் ‘அன்னம் அகரம்’ கவிஞர் மீரா தான். மற்றவர்கள் வெகுவாக வியாபாரிகள்தாம்.
க்ரியாவினுடைய வட்டம் குறுகியது மேலும் அவர்களது விற்பனைத் தளமும் வேறு. அகராதிகளின் மூலம் ஒரு நிலையான விற்பனைத் தளத்தை கொண்டு அவர்கள் நஷ்டமின்றி நடத்துகிறார்கள். அகராதிகள், மொழிபெயர்ப்புகள் மேலும் சில நல்ல தொகுப்புகளையெல்லாம் கொண்டு வந்துள்ளனர். ஆனால் பதிப்புலகின் அந்த மிக பெரும் பாய்ச்சல், மிக மிக முக்கியமான பங்களிப்பு கவிஞர் மீராவினுடையதே.
- ‘புது எழுத்து’ மனோன்மணி
இணையத்தில் இருந்து எடுத்தது

தமிழ் இலக்கிய உலகில் மீராவை எழுதாமல் வரலாறு முழுமையடையாது என்பதே அவருக்கான அங்கீகாரம்.
வணிகப் பதிப்பாளர்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. வானதி பதிப்பகத்தையும் சிசுசெல்லப்பாவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோமா?
நல்ல பதிவு. மீரா அவர்கள் பதிப்பகம் நடத்தியது, கைகளால் அச்சுக் கோர்த்த காலம். சவாலான காலத்தில் அர்ப்பணிப்புடனும், அற உணர்வுடனும் வாழ்ந்தவர் மீரா என்கிற மீ. ராஜேந்திரன்.