20 மாதங்களே மணவாழ்க்கை…

ச கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரம்பாள்…

பட்டுக்கோட்டை என்றாலே அது கல்யாணசுந்தரம் என்ற பாட்டுக்கோட்டை என்பது பாட்டாளி மக்களும் அறிந்த ஒன்று. பாட்டுக்கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகளில் 29 ம் வயதில் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து அரசு அதிகாரி ஆக்கிய பட்டுக்கோட்டையாரின மனைவி கௌரவம்பாள் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காட்டில் 2019, ஏப்ரல் 3 ந் தேதி இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார்.

மகன் குடும்பத்தோடு சென்னையில் வசித்தாலும் தான் கணவர் வாழ்ந்த வீட்டில் தான் கடைசி வைர வாழ்வேன் என்று சொந்த ஊரிலேயே இறுதி காலம் வரை வாழ்ந்தவர். பாட்டாளிகளின் மகா கவியான பட்டுக்கோட்டையோடு கௌரவம்பாள் வாழ்ந்த காலம் 20 மாதங்களே..

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறு வயதில் பாட்டுக்கட்ட தொடங்கிய போது அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் தான் எழுதிய பாடல்களை சிறு சிறு புத்தகங்களாக அச்சிட்டு திருவிழாக்களில் விற்றார். அப்படித் தான் ஒரு முறை பாட்டுப்புத்தகங்கள் அச்சிட்ட நிலையில் அதை வாங்க அச்சுக் கூலி கொடுக்க பணம் இல்லை. அதனால் அச்சகத்தார் புத்தகத்தை கொடுக்கவில்லை. ஆனாலும் அந்த இளைஞர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அந்த வழியாக வந்த தோழர் எம்.எம். என்கிற மாசிலாமணி என்ன என்று கேட்க பாட்டுப்புத்தகம் கொடுத்தால் திருவிழாவில் விற்று அச்சகத்திற்கு பணம் கொடுப்பேன் என்று சொல்ல.. அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்த எம்.எம். புரட்சிப் பாடல்களாக இருக்கிறதே என்று புத்தகத்தை கொடுக்கச் சொன்னார். திருவிழாவில் புத்தகம் விற்று பணம் கொடுத்தார் கல்யாணசுந்தரம். அதன் பிறகு சென்னை சென்றார். சென்னை சென்று சினிமாவுக்கு பாட்டு எழுதி ஓரளவு சம்பாதிக்கும் நிலையில் எம்.எம்.க்கு சைக்கிள் வாங்கி கொடுக்க நினைத்தார் அதற்குள் மறைந்து போனார்.

நன்றி: நக்கீரன் தகவல் : ஆர். கந்தசாமி

2 Comments on “20 மாதங்களே மணவாழ்க்கை…”

  1. பட்டுக்கோட்டையார் எங்கள் தந்தை கவிஞர். கு. மா. பாலசுப்பிரமணியம் அவர்களின் இளமைக்கால நண்பர். இருவரும் ஒரு படத்திற்கு பாடல்கள் எழுதிய காலம் உண்டு. எங்கள் இல்லத்திற்கு வந்து விருந்துண்டு தங்கியுள்ளார். அவருடைய ஒரே மகனின் (அரசு அதிகாரியாக பணி நிறைவு கண்டவர்) தொடர்பும் உண்டு. மக்கள் கவிஞர் இறக்கும்போது மகனுக்கு ஒரு வயது இருக்கலாம். வாழ்க., பாட்டுக்கோட்டையார் புகழ்!

Comments are closed.