புத்தாண்டு பிரார்த்தனை /ஆர். வத்ஸலா

நிறைந்திருக்கிறது யாவும்
என்று
நான் உணர வேண்டும்

எனதுள்ளம் அன்பில் தழைக்க வேண்டும்
அளவிலா அன்பில்
நான் மூழ்க வேண்டும்

எல்லோரையும் படிக்கத் தெரிய வேண்டும் எனக்கு
எல்லோரையும் எனக்கு
பிடிக்க வேண்டும்

உண்மை உணரும்
வலிமை வேண்டும்
வியக்கும் தன்மை
மாறாதிருக்க வேண்டும்

கற்றல் என்றும்
தொடர வேண்டும்
கடவுளை தினமும்
காண வேண்டும்

புதிதாய் நித்தம்
பிறக்க வேண்டும்
பராசக்தி!
எனக்கு நீ தாயாக வேண்டும்

3 Comments on “புத்தாண்டு பிரார்த்தனை /ஆர். வத்ஸலா”

  1. முதல் வரியிலேயே மனது நின்று விடுகிறது. ஆஹா!!!. நிறைந்த இருக்கிறது யாவும் என அறிவு சொல்கிறது, மனது அதை உணர வேண்டும்!. அதை ,அந்த கொடுப்பினை வேண்டும். .அருமை. பராசக்தி அருளட்டும் அனைத்தும்.!!!!

Comments are closed.