தாஸ்தாயவஸ்கி/வாசுதேவன்

தாஸ்தாயவ்ஸ்கி தன்னுடைய நாவலில் இப்படி எழுதுகிறார். காலக்கட்டத்தில் நல்லவனை பார்ப்பது சிரமமாக இருக்கிறது.ஆனால் செர்வாண்டிஸ் எழுதிய டான் குவிஸ்டோ அசட்டுத்தனமானவன்.அவன் அசட்டுத் தனமாக் இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது என எழுதிச்செல்கிறார்….தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாகப் படுகையில் கருணையுணர்வு பிற‌க்கிறது. அதன் காரணமாக வாசகனிடம் இரக்கம் பிறக்கிறது. இந்தக் கருணையை வெளிப்படுத்துவதே நகைச்சுவையின் இரகசியம்…

‘மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும். ஏனெனில் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்று சொன்னவர் சாப்ளின். இந்தக்கூற்றின் பின்புலத்தில் ஒரு அவலமான உண்மை உண்டு. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் லண்டனில் பிறந்தவர் சாப்ளின். அவர் பிறந்த சில மாதங்களில் பெற்றோர் பிரிந்தனர். தட்டுமுட்டு சாமான்களோடு வீதியிலும் கிடைக்கிற இடங்களில் தாயும் மகனும் வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவர் கண்டது துயரம், வறுமை…
ஆனால் அவர் படைப்புகளில் தன் வாழ்க்கையை துளிக்கூட பிரதிபலிக்காத மகா கலைஞன்.

1931 ல் காந்தி லண்டன் சென்றபோது அவரை சந்திக்க வேண்டும் என சாப்ளினிடமிருந்து விண்ணப்பம் வந்தபோது காந்திக்கு அவர் யார் எனத் தெரியாது. சந்திப்புக்கு முன் சாப்ளினைப் பற்றி முழுவதும் அறிந்துகொண்டார். அவர் ராட்டை சுற்றுவதைப் பார்த்து சாப்ளின் அதைப்பற்றி கேட்க அதன் முக்கியத்துவத்தை புரியவைத்து கிராம பொருளாதாரத்தை விளக்கி சொன்னார். நவீனத்துவம் மனிதனை ஆன்மீக அனுபவத்திற்கு இட்டு செல்லாது எனவும் இயந்திரகதிக்கு ஆளாக்கப்படுவான் என்பதை சாப்ளின் ஆழமாக் உள்வாங்கிகொண்டு ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற அற்புதமான படத்தை இயக்கினார் என்ற கோணமும் உண்டு.நவீன காலக்கடத்தின் அபத்தத்தை வெறுமையை The Modern Times திரைப்படத்தில் சித்தரித்தார். நவீன காலக்கடத்தின் அபத்தத்தை வெறுமையை The Modern Times திரைப்படத்தில் சித்தரித்தார். சந்திப்புக்குப்பிறகு சாப்ளின் காந்தியைப்பற்றி சுவாரஸ்யமாக இப்படி குறிப்பிட்டுள்ளார், ” Gandhi was the most entertainment person”

‘இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உள்பட உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ .
~ சார்லி சாப்ளின்.

( இன்று சாப்ளினின் பிறந்த நாளை பொருட்டு இதை எழுதினாலும் அவர் இயக்கிய மவுன திரைப்பட காலத்தில் மற்றொரு மேதையும் வாழ்ந்து அபாரமான படங்களை வெளியிட்டார். சாப்ளின் மேதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவருடைய சமகாலத்தவரான பஸ்டர் கீடனுக்கு (Buster Keaton) போதிய வெளிச்சம் கிடைக்காதது துரதிருஷ்டம். கீடன் தொழிற்நுட்பம் இல்லாத மவுன படக் காலத்தில் பல அபாயகரமான உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். யு டியுபில் பார்க்கலாம்.)