வரிசை/புஷ்பா விஸ்வநாத்

ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற வரிசையிலே
புன்னகையுடனேபார்த்திருந்தேன்
தியேட்டர் வரிசையில் நின்ற போது
திரும்பித் திரும்பிப் பார்த்த பின்பு
கண்கள் வழியே இதயம் நுழைந்து
காதல் மலர்ந்தது நம்மிடையே