18.04.2022

ரங்கநாதனுக்குக் கடவுள் பக்தி அதிகம். அவன் ஒவ்வொரு கோவிலாகச் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் போகாத கோயில் வேண்டாத தெய்வமில்லை.
அவன் பெற்றோர் அவனைப் பற்றி கவலைப்பட்டார்கள். நல்ல வேலையிலிருந்தும் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை.
'அவன் வேண்டிக்கிற கடவுள்தான் அவனுக்கு வழி காட்டணும்' என்று அவன் பெற்றோர்கள் நினைத்தார்கள்.
அவனுடன் கோயிலுக்குப் போகும்போது இதைத்தான் அவர்கள் வேண்டிக்கொள்வார்கள்.
அவர்கள் விருப்பப்படியே அவனுக்கும் ஒரு பெண் கிடைத்தாள். திருமணம் நடந்து முடிந்தது.
ரங்கநாதனுக்கு மூன்று பெண்பிள்ளைகள். அவர்களைப் படிக்க வைத்து, ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
ஆனால் அவன் இயல்பு படி கோயிலுக்குப் போக அவன் தவறுவதில்லை. கோயிலுக்கு அவன் பெண்களையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு போகத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் அவன் அப்பா அம்மா. அவர்கள் காலமான பிறகு அவன் மனைவி, மகள்கள்.
ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கும் கடவுள் முன் மனமுருக வேண்டிக்கொள்வான். அவன் வேண்டுதலுக்குப் பலன் கிடைக்காமலில்லை.
ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ குறை. அவன் மனைவி படுத்தப்படுக்கையாகி விட்டாள். அவளைத் தினமும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவன் வேண்டிக்கொண்டான், ஆண்டவனே என்னை நாத்திகனாகவே இருக்க விடு நான் எதற்கு உன்னை வேண்ட வேண்டும். உன்னால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாது என்று.
அவன் மனைவிக்கு அவன் குணம் தெரியும். எதையாவது பிடிவாதமாக நினைத்துக்கொள்வான் என்று நினைத்தாள்.
சில தினங்களாகப் பக்தி சிரத்தை குறைந்து கோயிலுக்குப் போவதையே நிறுத்தி விட்டான்.
அவன் மனைவி, "ஏன்" என்று கேட்டாள்.
" எதற்குப் போகவேண்டும் என் பிரச்சினை தீராத பிரச்சினையாகி விட்டது, " என்றான்.
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
