யோகி – இன்றொரு சேதி…./விசிறி சங்கர்


O


ஹரிதாஸ் கிரி சுவாமிகளிடம் முதல் தரிசனத்தின் போதே, அவர்தம் கரம் பற்றி யோகி கூறியது யாது ?
O
ஹரிதாஸ்கிரி சுவாமிகளை அவரது ஆத்மநண்பர் துக்காராம் என்பவர் ஒரு கார்த்திகை தீப நன்னாளில், திருவண்ணாமலை சென்றபோது, யோகியை தரிசிக்க அழைத்துச் சென்றார்.
O
யோகி எங்கிருப்பார் என்பதை நிர்ணயம் செய்திட முடியாத ஆரம்ப காலம் அது. தாங்கள் வந்த அம்பாசிடர் காரை கோவில் அருகே நிறுத்தி விட்டு, கோவில் நோக்கி அவர்கள் சென்றபோது, கோவில் அருகே ஒரு தேங்காய் கடை முன்பு யோகி நிற்பதைப் பார்த்து அருகில் சென்றதும், நெருக்கமாக அருகில் வந்த யோகி, துக்காராமின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு, Hallo my friend How are you ? This beggar is so happy to see you ! ” என்று அன்பொழுக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்.
O
துக்காராம் அவர்கள் ஹரிதாஸ் கிரி சுவாமிகளை யோகிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அப்போது தான் மலர்ந்த தாமரை போன்ற தம் கண்களை அகலவிரித்து, ஹரிதாஸ் கிரி சுவாமிகளை நோக்கிய வண்ணம் அருகில் வந்து, அவரது இரு கரங்களையும் பற்றிக் கொண்டு
அதிர் வேட்டு போல பெரும் சிரிப்பொன்றை அள்ளி வீசினார்.
O
விடைபெறும்போது, யோகி கூறினார் : ஹரிதாஸ்ஜி You are my best friend ! அதிலிருந்து பலமுறை வந்து யோகியை தரிசித்துச் சென்றுள்ளார் ஹரிதாஸ் கிரி சுவாமிகள்.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா