
தன்னறிவுதேடி இல்லறம் துறந்தபுத்தனுக்கு ஒருபோதிமரம்…
போதிமரங்கள் பல்லாயிரமுண்டு இன்று
புத்தர்களெல்லாம் போதையுடன்.
ஆசையை துறக்கச்சொன்னவன் ஆசை
மானுடம் சிறக்க நல்லஅறம்.
உள்ளத்தில் அழுக்கைப் பொதியாய்ச் சுமக்கும் இந்த
மந்தைகள் இனமா மாறிவிடும்.
வீட்டில் ஆயிரம் வசதிகள் இருந்தும் …நூல் அறைக்கு என்று தனியே இடமில்லை…
நல்லநூல்களை தேடிப்படிக்கும் பண்பினை யாரும் வளர்க்கவில்லை.
வேலைக்கான கல்வித்திட்டம்
அறிவிற்கு வளர்ச்சியைத் தரவில்லை…
வாழ்க்கை ஓட்டம் வெல்லத்துடிக்கும் போர்வெறி மனதில் அமைதியில்லை.
நல்லபுத்தகம்…நல்லநண்பன்
தோழமை கொள்வார் யாருமில்லை…
தன்னைத்தானே தொலைத்துக்கொள்ளும் சூன்யமனதில் ஞானமில்லை.
உன்னைநீயே உணர்ந்துகொள்ள நல்ல நூல்களைத் தேடிப்படி.
திறன்பேசியை கொஞ்சம் விலக்கு யாவும் நடக்கும் நல்லபடி.
புத்தகம் என்ற போதிமரம் கைக்குள் அடங்கும் கண்டுபிடி.
மனதில்இருளை விரட்டும் ஔியை உலகம் பார்க்க உயர்த்திப்பிடி.
