கவி காளமேகம் பாடல்கள் /நிந்தாத் துதிகள்

அ. இகழ்வது போல் புகழ்தல்

காஞ்சி வரதர் கருட உற்சவத்தைச் சேவித்து இகழ்வது போல்
புகழ்ந்து பாடியது

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துாடுத்துப் போகிறதே பார்!

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராசப் பெருமாளும் நல்ல பெருமாளே! அவருடைய கருடசேவைத் திருவிழாவும் காண்பதற்குரிய நல்ல திருநாளே! ஆனால், அவர் இருந்த இடத்தில் சும்மா இராமல், அன்பருக்கன்றோ அருள் புரிகின்றார்? அதனால், அந்தோ ! அவரைக் கருடன் சுமந்து செல்கின்றது! பாருங்கள்!

பெருமாள் – திருமால். ஐயோ – அந்தோ ! பருந்து – கருடன். இருந்த இடம்: இருந்திடம். போகிறதைப் பார்’ என்பது, பாட வேறுபாடு.

தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோலப்
புகழ்ந்து பாடியது