மதிப்பு-3/தி சோ வேணுகோபாலன்

ரண சிகிச்சை
பல பெற்ற
கிழச் செருப்பு:
கனத்த பை.
‘எறி’ என்றேன்.

“மொட்டைத் தூண்கள்
மூளிச் சிலைகள்
இருட்டடி பட்ட
குகை ஓவியங்கள்
இவை கண்டு
ரசிக்கப்
பல்லாயிரம் பேர்!
ஓட்டைச் செருப்பு
உதவாமல் போகிறதோ ?
அழகெதற்கு?”
என்றான் !

“உடைந்த தூணும்
உருக்குலைந்த சிலையும்
காலத்தின்
குருட்டுத் தூரிகை
பட்டு மறையும்
ஓவியமும்
இதயத்தை இழுக்கவில்லை !

மண்தின்ற கரங்களுக்கு
மனமார்ந்த தொழுகை
இம்
மனித எண்ணங்கள் ! ”