இரு குறும் கவிதைகள்/பேயோன்

அங்கே

குறைவாகப் பேசு
மெதுவாகப் பேசு
மென்மையாகப் பேசு
அதையும்
மற்றவர்களிடம் பேசு.


காகிதக் கப்பல்

காகிதக் கப்பலை
ஓடையில் விட்டு
அதன் வேகத்திற்குப்
போட்டியாய் ஓடும் சிறுவன்
குறுக்கிட்ட மேடொன்றில்
தடுக்கி விழுகிறான்
நின்று திரும்பிப்
பார்க்காத கப்பலை
ஓடை இழுத்துச் செல்கிறது.