குறுஞ்செய்தி/பேயோன்

என் இறப்புச் செய்தியைச் சொல்லி
எனக்கே குறுஞ்செய்தி வந்தது
அனுப்பியவரை அழைத்தேன்
“நீங்க இதுக்கெல்லாம்
வர மாட்டீங்கன்னு தெரியும்
இருந்தாலும் கூப்புடுறதுதானே மொற.”