
இறந்த பின்பு என்னைக்
கண்ணாடியில் பார்க்கிறேன்
இப்படி ஒருவன் இருந்தேன் என்றும்
இப்படி ஒருவன் இல்லை என்றும்
நம்ப முடியவில்லை.
பல முறை நானும் இறப்பதுண்டு
ஒவ்வொருவர் மரணமும்
என் மரணம் ஆகும்போது
இல்லை, இன்னும்
படிக்கவில்லை
இன்றைக்கு பேப்பர்
ஆட்சிகள் மாறட்டும்
அப்புறம் படிக்கிறேன்.
வளர்த்த குழந்தைகளிடமிருந்து
பிரிந்துகொண்டே
புதிய குழந்தையைப்
பழகிக்கொள்கிறேன்.
முதலில் நெருப்பாகிறோம்
பின்புதான் அழிகிறோம்
எனவே அதில் எனக்குப்
பிரச்சினை இல்லை.
