
சலீம் கெளஸ் – சந்தேகமே இல்லாமல் சினிமாவின் ஸ்டைலான வில்லன்களில் முதன்மையானவர்; முக்கியமானவர்.
‘வெற்றி விழா’ திரைப்படத்தில், தனது கம்பீரமான குரலில், வித்தியாசமான மாடுலேஷன்களில், வெவ்வேறு முகபாவங்களில் கதாநாயகனின் பெயரை ‘ஸ்டீபன் ராஜ்’…‘ஸ்டீபன் ராஜ்’ என்று வசனம் பேசி நடிக்கும் போது கமலை விடவும் சலீமைத்தான் நமக்கு அதிகம் பிடித்து விடும். அப்படியொரு பிரத்யேக பாணி நடிப்பு.
‘திருடா திருடா’ திரைப்படத்தில் “உங்களுக்குப் போய் துரோகம் செய்வேனா.. பாஸ்.. உயிரையும் கொடுப்பேன்..” என்று ஒரு அடியாள் கதறும் போது “அப்ப கொடு” என்று அழுத்தமான குரலில் சொல்லி விட்டு அலட்டிக் கொள்ளாமல் சுட்டுக் கொன்று விடுவார்.
*
தமிழ் சினிமா சலீம் கெஸை பெரும்பாலும் வில்லனாகவே பயன்படுத்தியது. ஆனால் இவர் அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அற்புதமான நடிகர். மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்றவரும் கூட. (நம்ம சென்னைகாரர்ப்பா..!)
இந்தி தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்களில் ஏராளமாக நடித்தவர், பிறகு தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து அசத்தினார்.
மிக மிகத் திறமையான நடிகர்களை, சினிமா குறைவாகவே பயன்படுத்திக் கொள்ளும். விவேக் பாணியில் சொன்னால் “ஒரிஜினல் போல. அதான் உடம்புக்கு ஒத்துக்கல”.

அடடா
இவர் பெயர் அறியேன்
நானும் வெற்றி விழாவில் இவரது அசத்தல் உடல் மொழி, ஸ்டீஃபன் ராஜ் உச்சரிப்பு, அமலாவைக் கண்ட துண்டமாக வெட்டி விட்டேன் என்று பாசாங்கு பாவனையில் கமலை மிரள வைத்தல், க்ளைமாக்ஸ் காட்சியில்….. ரசித்து ரசித்துப்.பார்த்தவன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் எழுத்து சிறப்பான அஞ்சலி