புரட்சிக்கவி பாரதிதாசன் கடைசிக் காலத்தில் இரண்டு கனவுகள்

புரட்சிக்கவி பாரதிதாசன் கடைசிக் காலத்தில் இரண்டு கனவுகள் வைத்திருந்தார்

1….“பாண்டியன பரிசு” காப்பியத்தை திரைப்படமாக எடுப்பது

2) பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுப்பது.

பாண்டியன்பரிசு காப்பியத்தை படமாக எடுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல….. அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்… திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில் பெயர்க்க வேண்டும்…. நூலகம் சார்பாக பதிப்பகம் தொடங்க வேண்டும்… பல நலிந்த எழுத்தாளர் கவிஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

இதற்காக சிவாஜி உட்பட , பல இயக்குனர்களை சந்தித்து ஏற்பாடாகும் போது அது நிறைவேறாமலே உலகவாழ்வை முடித்துக் கொண்டார்.

-இரண்டாவது கனவு , பாரதி வாழ்வை படமாக்குவது

கதை, எட்டையபுர சமஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது.. .சமஸ்தானத்தை “செக் நாட்டு ” தமிழறிஞர் கமில்ஸ்வலபில் என்பவர் பார்வை இடுவதாகவும், பாரதி பற்றி கேட்கும் போது அருகிலிருக்கும் பாரதிதாசன் “பாரதி பிறப்பினிலே ஒரு புதுமையான நிகழ்ச்சி அடங்கி இருக்கிறது” என்று கூற ……”அது என்ன/” என்று அறிஞர் கேட்க , பாரதி வீட்டிலிருந்து ” ஃபிளாஸ் பேக்” உத்தியில் படம் துவங்குகிறது
இதுவும் நிறைவேறவில்லை

இது குறித்தெல்லாம் ,ஈரோடு தமிழன்பன்,அவர்களுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதம் மூலம் அறியமுடிகிறது அதுதான் பாரதிதாசன் எழுதிய கடைசிக் கடிதம்[ 15/4/1964}.

மற்றும் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் புரட்சிக் கவி பரிமாறிய உரையாடல் மூலமும் அறிய முடிகிறது…..{ஆதாரம் ..ய .மணிகண்டன் கட்டுரை . காக்கைச் சிறகினிலே