
இவர்போல்
இன்னொருவர்
இல்லையென்பார்
இவரே
இகத்தின்
எல்லையென்பார்
கண்கண்ட
தெய்வமென்பார்
காணக்கண் கோடி வேண்டுமென்பார்
மன்னராட்சி
போன பின்னரும் மாமன்னரே என்பார்
எச்சி கையைக்கூட
காக்காவுக்கு
காட்ட மாட்டார் கருணைக்கடலே என்பார்
தமிழ் பேச
தடுமாறுவார்
எங்கள்
பாரதியே என்பார்
போது போதுமென்று கேட்டாலும்
கெஞ்சினாலும்
இன்னும் இன்னுமென
பேசிக்குவிப்பார்
எல்லா வார்த்தைகளும் தீர்ந்த பின்னே எதிர்பார்ப்பின்
பாத்திரத்தை
ஏந்துவார்
ஏதும்
கிடைக்காது
போயினும்
நாளைக்காவது கிடைக்குமென
நாளையும்
தொடர்வார்
இவர்போல்…..
–
